SDB வங்கியானது மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும் கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகியஇருவருக்குமான நிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால் சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கானவங்கியின் மைய கொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதியினால் செலுத்தப்படும் வியாபாரகிடைப்பரப்பொன்றாக பெறுமதி சங்கிலி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது. VFC வியாபார மாதிரியானதுதத்தமது தனித்துவமான தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான நிதிசார்ஆதரவினை வழங்குவதனால் பல்வேறு துறைகளையும் வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்திய முயற்சியாக, பாலுற்பத்தி துறைக்கான VFC ஒழுங்குகளை வெற்றிகரமாக வெளியிட்டுநிறைவுசெய்துள்ளது. இத்துவக்த்துடனான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை SDB வங்கியின்குளியாப்பிட்டிய கிளை முகாமைத்துவம் செய்கின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது கால்நடை கொட்டகைகளை புனருத்தாரனம்செய்தல், கொட்டகை கட்டுமானம் மற்றும் மந்தை கொள்வனவு ஆகியவற்றினை வளப்படுத்தும் கருவிகளாகவிளங்குகின்றன. இம்முயற்சிகள் உள்ளுர் பாலுற்பத்தி கைத்தொழிலினை வளர்ப்பதற்கும்விருத்திசெய்வதற்குமாக குறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வங்கியானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களது துறைகளில் அறிவூட்டுவதனை நோக்கமாக கொண்டவிழிப்புணர்வு அமர்வினை நடாத்தியது. இவ்வமர்வானது அவர்களது உற்பத்தி மற்றும் நிதியியல் அறிவினைவளப்படுத்துவதற்கு அத்தியாவசியமான பெறுமதிமிக்க அறிவு மற்றும் திறனை உள்ளடக்கியிருந்தது.
இத்துவக்கம் குறித்து கருத்துரைத்த, SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கபில ஆரியரத்ன அவர்கள், ‘SDB வங்கியின் பெறுமதி சங்கிலி நிதியிடலானது தனித்துவமான நிதியியல் தீர்வுகள்மூலமாக துறைசார் வளர்ச்சியினை முன்னகர்த்தும் எமது அரப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எமதுமுதலாவது செயற்றிட்டமாக, CEETEE உடனான எமது கூட்டுறவானது பாலுற்பத்தி துறையின்அபிவிருத்திக்கான எமது அர்ப்பணிப்பிற்கான உதாரணமாகின்றது. அத்தகைய துவக்கங்கள் அக்குறித்ததுறைகளை உயர்த்துவது மாத்திரமின்றி தேசிய அளவிலான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பரந்தபொருளாதார பரப்பிற்கும் பங்களிக்கும் என நாம் நம்புகின்றோம்‘ என்றார்.
பாலுற்பத்தி விவசாயிகளுக்கான விழிப்புணர் அமர்வானது மாடு உற்பத்தியினை மேம்படுத்தல், பால் பாதுகாப்புதொழிநுட்ப கொள்வனவு மற்றும் நிதிசார் அறிவு போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது. வெளிவாரி நிபுணர்கள் மற்றும் SDB வங்கி அணியுடனான பங்குடைமையில்நடாத்தப்பட்ட,இப்பயிற்சிப்பட்டறையானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களுக்குத் தேவையான அறிவுமற்றும் திறன்களுடன் வலுப்படுத்துவதனை நோக்கிய முக்கியதொரு அடியாக விளங்கியது.
சமுதாயங்கள், கூட்டுத்தாபனங்கள், சுயதொழில்வாண்மையாளர்கள், மற்றும் முன்னேற்றகரமான சிறிய மற்றும்நடுத்தர தொழில்முயற்சியாளர்கனை எப்பொழுதும் ஆதரிக்கும் வங்கியாக, அதே போன்று உள்ளுர் பாலுற்பத்திதுறை அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடையதாக விளங்குவதுடன் இத்துறையில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும்வளர்ச்சியினை பேணுவதற்கு பங்குதாரர்களுடன் தொடர்ந்தும் கூட்டிணைய எதிர்பார்த்துள்ளது