பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

பிரதேச சமுர்த்தி சிறுவர் கழகங்களுக் கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி (21) சாய்ந்மருது பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வறுமை ஒழிப்பு வாரம் மற்றும் சர்வேதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக கமூர்த்தி வங்கிச் சங்கத்தின் சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருக்கி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டது.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் ஆரம்பித்து போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எம்.சபுறுதீன், இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களான ஏ.எம் காலிதீன், எம்.ஐ. அன்சார், ஏ.எம்.அபுல் ஹுதா, ஓய்வுபெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன