பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்ப்பதற்கு இந்திய
புதிய பிரதி உயர் ஸ்தானிகர் உறுதி

இலங்கைக்கான இந்திய புதிய பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் (ஆகஸ்ட் 11) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சிக்கு வருகை தந்த புதிய பிரதி உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் இருதரப்பு பாதுகாப்பு விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக கலாநிதி பாண்டே இந்த சந்திப்பின் போது உறுதியளித்தார்.

அத்துடன் புதிதாக நியமனம் பெற்றுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகரின் எதிர்கால நடவடிக்கைகள் சிறப்பாக அமைய பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் புனீத் சுஷில் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தம்மிக்க வெலகெதர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன