பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சை திணைக்களம் அறிவுறுத்தல்

எதிர்வரும்  29 ஆம் திகதி ஆரம்பமாவுள்ள 2022 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை  பரீட்சார்த்திகளுக்கு விரைவில் வழங்குமாறு பரீட்சை திணைக்களம் பாடசாலை அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சார்த்திகளுக்கு அவற்றை வழங்காமல் நிறுத்தி வைக்கக் கூடாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நுழைவுச் சீட்டுகள் இல்லாத காரணத்தினால் எந்தவொரு பரீட்சார்த்தியும் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கான  முழுப்பொறுப்பையும் அதிபர்களே ஏற்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான பரீட்சை எதிர்வரும் 29ஆம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன