பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC)  இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து துறை பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆகக் குறைந்த குறைந்த பட்ச பஸ் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன