பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புவதற்கான சாத்தியம் குறித்து விரைவில் ஆராயப்படும்

பல்கலைக்கழக கட்டமைப்பைப் பலப்படுத்துவது நாட்டின் முக்கியமான முதலீடாகும் என அரசாங்கம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத் துறையில் தற்போது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான சாத்தியம் குறித்து விரைவில் ஆராயவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் உயர் கல்வி அமைச்சுடன் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிதி அமைச்சினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் குறிப்பிட்டார்.

உபவேந்தர்கள் சங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் மற்றும் கல்வி நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டார்கள். பல்கலைக்கழக ஊழியர்கள் கட்டமைப்பில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அங்கு குறிப்பிடப்பட்டது. பெரும்பாலானவர்கள் வெளிநாடு சென்றமையே இதற்குக் காரணம் என விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினர். ஒருவர் வெளிநாடு செல்லும் போது, புதிதாக ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய கூடிய வகையில் ஒரு திட்டம் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன