நேபாள நாட்டில் நிலநடுக்கம் – 128 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நேபாள நாட்டில் நேற்றிரவு(03.11.2023) 11.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் 128க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.141 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் டெல்லி, பீகாரிலும் நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் மாவட்டத்தில் (PAINK) பெய்ங்கில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

நிலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 அளவில் பதிவானது. சுமார் 1 நிமிடத்துக்கு மேலாக நீடித்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால், கட்டட இடிபாடுகளில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன