நியூசிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி ,எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் மற்றும் T 20 கிரிக்கெட் தொடர் போட்டிகளில் கலந்துகொள்ளும் என்று இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்பேரவையின் மகளிர் கிரிக்கெட் வெற்றிக்கிண்ண போட்டி ஒருநாள் தொடரின் ஒருபகுதியாக இது நடத்தப்படுவதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி ஜூன் மாதம் 23, திகதி இலங்கைக்கு வரவுள்ளது.