நாளை முதல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு

முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித்தொகை பிரதேச செயலகங்களிலும் நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜுலை மாதத்திற்கான, சிறுநீரக நோயாளர்கள், வலது குறைந்தோர், குறைந்த வருமானம் பெறும் முதியோர் ஆகியோருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து இரண்டாயிரத்து 684 மில்லியன் ரூபா நிதி, அனைத்து மாவட்ட செயகங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன