நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை

நாட்டைப் பிரிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

நாடு நெருக்கடியில் இருக்கும் போது மாகாண சபைகள் தொடர்பான 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது சரியான நடவடிக்கையல்ல என்று முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டின் ஸ்திரத்தனமையை சீர் குலைப்பதற்கு வெளிநாட்டு சக்திகள், பல்வேறு அமைப்புகள் பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தி முயற்சிகளை மேற்கொள்ளக்கூடும். இதனால் அதிகாரப் பகிர்வு குறித்த ஆலோசனை விடயம் இந்த சந்தர்ப்பதில் அவசியமானது அல்ல என்பதை ஜனாதிபதியிடம் கூறுகின்றோம்.பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் விடயத்திற்கு நேரடியாக பங்களிப்பு செய்யப்படுவதுடன் ஏனைய விடயங்கள் மறக்கப்படவேண்டும என்பதை வலியுறுத்துகிறோம். ஜனாதிபதியிடம் நாம் எதிர்பார்ப்பது

மக்கள்விரும்பும் பொருளாதார ஸ்த்திரத்தனமை யேயாகும். நாட்டைப் பிளவுபடுத்தும், நாட்டை ஒற்றையாட்சி முறையை சீர் குலைக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் உதவ மாட்டோம் அவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருப்பவருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள இயைதள ம் ஒன்றுக்கு இன்று(14) இந்த விடயத்தை முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன