தெற்கில் 2 சுப்பாக்கி சூட்டுச் சம்வங்கள்: உயிரிழப்பு 2

தங்காலை மற்றும் திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தங்காலைஇ குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் தனது வீட்டிற்கு அருகில் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்து போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிருயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திக்வெல்லை போதரகண்த என்ற இடத்தில் இடம்பெற்ற மற்றுமோரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மொரட்டுவையைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன