துருக்கி,பஸ் விபத்து:9 இலங்கையர்கள் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை

துருக்கி,இஸ்தான்புல்  இடம்பெற்ற பஸ் விபத்தில் இருபத்தி ஒன்பது இலங்கையர்களில் ஒன்பது பேர் தற்போது இஸ்தான்புல்லில் உள்ள மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் துருக்கியில் உள்ள இலங்கை துதரகம் அந்நாட்டு வெளிவிகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு தேவையான நடவக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

வெளி நாட்டலுவல்கள் அமைச்சு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து,பாதிக்கப்பட்ட இலங்கையர்களின் நல்வாழ்வாழ்வை  உறுதிசெய்ய அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விபத்து குறித்து இன்று(12) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் இஸ்தான்புல்லில் இலங்கைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இம்மாதம் 9 ஆம் திகதி விபத்திற்குள்ளானது. தொழிலாளர்கள் அதே பகுதியில் அமைந்துள்ள பணியிடத்திலிருந்து தங்களுடைய தங்குமிடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

துருக்கி, இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 39 இலங்கையர்கள் பயணித்துள்ளனர்.

கடமைகளை  முடித்துக் கொண்ட இலங்கையர் குழு, பேருந்து ஒன்றில் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே யூப்சுல்தான் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சுரங்கப்பாதையில் பயணித்த பேருந்து பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sri Lankan Workers involved in Accident in Istanbul Treated and Recovering

A bus transporting Sri Lankan workers in Istanbul, Turkey had met with an accident on 9 August 2023.  The workers were on their way to their accommodation from the worksite, located in the same vicinity, when the accident occurred.

Out of the twenty-nine Sri Lankans involved in the accident, nine are currently undergoing treatment in three different hospitals in Istanbul. The remaining twenty who were being treated in hospitals, were discharged on the same day.

The Embassy of Sri Lanka to Turkey has been in constant contact both with the company that employed the Sri Lankans and the hospital authorities regarding the condition of the injured, and has been providing necessary assistance, in coordination with the company.

The Embassy is also in contact with the Turkish Foreign Ministry regarding the investigation into the incident and providing necessary assistance to the affected Sri Lankans.

The Ministry of Foreign Affairs is closely monitoring the situation and taking necessary measures in coordination with the Embassy of Sri Lanka in Ankara to ensure the well-being and recovery of the affected Sri Lankans.

Ministry of Foreign Affairs

Colombo

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன