திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தடையை மீறி வீடியோ எடுத்தவர் மீது விசாரணை

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் தடையை மீறி வீடியோ எடுத்தவர் மீது விசாரணை நடத்தப்பட்டுவருவதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்குள் பாதுகாப்புக் கருதி கையடக்க தொலைபேசி முதலான எந்த மின்னணு சாதனத்தையும் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய தொலைப்பேசியைக் கொண்டு சென்று ஆனந்த நிலையம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை விடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இப்படி ஒரு சம்பவம் நடந்தமை திருப்பதி திருமலை கோயில் நிர்வாகத்துக்குத் தெரிய வந்துள்ளது. உடனடியாக கோயில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டு, விடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆலய நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த  ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

.  

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன