தரவரிசைப் பட்டியலில் இலங்கைக்கு 9ஆவது இடம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள புதிய  ஒரு நாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 9ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையை விட பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னிலையில் இருக்கின்றன. பங்களாதேஷ்  கிரிக்கெட் அணி  7ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 8வது இடத்தில் உள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் 2ஆவது இடத்திலும் ,இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து 4ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

5 ஆவது இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும், 6ஆவது இடத்தில் தென் ஆப்ரிக்கா அணியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டுமே வரும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு  நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன