டோக்கன் (Token system) முறையின் கீழ் கடவுச்சீட்டுகள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான இணையவழி மூலமான முறையை முடிவுக்குகொண்டுவந்துள்ளது.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இணையவழி மூலம் அதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும்  முறை நேற்று முன்தினம் (17) முதல்  நிறுத்தப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம்  ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நேற்று முதல் டோக்கன் Token system  முறையின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், பத்தரமுல்லையில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும  ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய இணையவழி முறையை அறிமுகப்படுத்த, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

புதிய முறையின் கீழ், பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே இணையவழி  மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பதாரர்களின் கைரேகைகளைப் பெறுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள  50 பிரதேச செயலகங்கள் உதவும்.

கடவுச்சீட்டுக்கான கொடுப்பனவுகளை இணைய வழி  அல்லது இலங்கை வங்கி ஊடாகச் செலுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன