டயனா கமகேவின் எம்.பி பதவி மீதான தீர்ப்பு இன்று

பிரிட்டன் பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  இரத்து செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்படவுள்ளது.

பிரித்தானிய பிரஜை என்று கூறப்படும் டயனா கமகேவிற்கு இலங்கை குடியுரிமைக்கான அந்தஸ்த்து இல்லை. இதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி செல்லுபடியற்றதாக்கு மாறு சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட  (Writ Petition ) நீதிப்பேராணை விண்ணப்ப மனு மீதான தீர்ப்பே இன்று இவ்வாறு அறிவிக்கப்படவுள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன