டயனா கமகேவின் எம்.பி பதவி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் திருமதி டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரஜை என்று கூறப்படும் டயனா கமகேவிற்கு இலங்கை குடியுரிமைக்கான அந்தஸ்த்து இல்லை என்றும்  இதனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கு மாறு சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட  நீதிப்பேராணை விண்ணப்ப மனு மீதான தீர்ப்பே இன்று  அறிவிக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது..

தீர்ப்பு அறிவிப்பு ஜூலை 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன