ஜனக ரத்நாயக்க தோற்கடிப்பு – பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷப்ரி ரஹீம் ஜனகவுக்கு ஆதரவாக வாக்களிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க வகித்த பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம்  நேற்று (24) பாராளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து  நீக்குவ தற்கான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும்  எதிராக 77 வாக்குகளும் பதிவானது.

பிரேரணை மீதான விவாதம் நேற்று காலை 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை பாராளுமன்றத்தில் இடம்பெற்று அதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததையடுத்து ,விவாதத்தை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆரம்பித்து வைத்தார்.

மின்சார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு அமைய மின் கட்டணத்தை அதிகரித்த போது அதனை  விமர்சித்து ஜனக ரத்நாயக்க தன்னிச்சையாக நடந்து கொண்டதாகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 7ஆவது பிரிவின் கீழ் இவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்ததாக , சுங்கப் புலனாய்வுப் பிரிவினரால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ,ஜனக ரத்நாயக்கவை பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திற்கு வந்து வாக்களித்திருந்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன