சீரற்ற காலநிலை:  பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம்

சீரற்ற காலநிலை  காரணமாக தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அந்தந்த  பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை  காரணமாக ஹட்டன் கல்வி வலயகத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் விடுமறை அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்  நுவரெலிய கல்வி வலயத்திலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற காலநிலை  காரணமாக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க  முடியாத நிலைமை காணப்பட்டால்  அந்தந்த பாடசாலைகளின் அதிபர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும்.

இது தொடர்பாக அதிபர்கள் கோட்ட கல்வி மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்க முடியும்  என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன