சீப்புக்குளத்திற்கு அருகில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

மிஹிந்தலை சீப்புகுளம் தம்மென்ன்னாவ சீப்புக்குளத்திற்கு அருகில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரின் பிரேத பரிசோதனை நேற்று (11) இரவு தம்மென்னாவ மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை நேற்று பிற்பகல் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்துள்ளது. கெக்கிராவ, தம்புத்தேகம தலாவ, கஹடகஸ்திகிலி, சீப்புக்குளம் உட்பட பல பகுதிகளில் மின்னல் தாக்கமும் இடம்பெற்றுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன