சீனாவுக்கும் இலங்கைக்கிடையில் மீண்டும் எயார் சைனா விமான சேவை

சீனாவுக்கும் இலங்கைக்கிடையிலான சீனாவின் எயார் சைனா விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைவாக  சீனாவின் எயார் சைனா (Air China), செங்டுவுக்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலான விமான சேவையை எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது.

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை செங்டு மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையே விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

செங்டு தியான்ஃபு (Tianfu) சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் குறித்த தினங்களில் இரவு 8:55க்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

அத்துடன், செங்டுவுக்கான விமானம் இரவு 10:15க்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன