சீனக்குடா விமானப்படை தள பயிற்சி விமானம் விபத்து

திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தள பயிற்சி விமானம் PT6 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை விமானப்படையின் சீனக்குடா விஞ்ஞானப் பிரிவு கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 விமானப் பயிற்சிப் பிரிவின் விமானிகளுக்குப் பயிற்சியளிக்கப் பயன்படுத்தப்படும் PT6 ரக   ரக விமானம் ஒன்றே இவ்வாறு இன்று (07) மு.ப. 11.27 மணியளவில்  விபத்துக்குள்ளானதாக, விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணையை நடத்த விசேட விசாரணைக் குழுவை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமித்துள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன