சிறைக்காவலரின் உள்ளாடைக்குள் புகையிலை அடங்கிய பொதி

சிறைச்சாலை சிறைக்காவலர் ஒருவரிடமிருந்து புகையிலை அடங்கிய பொதி  ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக  சிறைச்சாலை  ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இணைந்ததாக  கடமையாற்றிய சிறைக்காவலர் ஒருவர் 08.11.2023 அன்று காலை 09.25 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைவதற்கு முன்னர், கடமையில் இருந்த சிறைச்சாலை அவசரகால தந்திரோபாயப் படை அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  

அப்போது, அதிகாரி அணிந்திருந்த உள்ளாடையில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 புகையிலை பார்சல் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சிறைக்காவலர் ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன