கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலகம் நடத்திய களிகம்பு பயிற்சி பட்டறை நடைபெற்றுள்ளது.
இதனுடன் இணைந்ததாக களிகம்பு அரங்கேற்றமும் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ். சுரேஷிளின் ஒருங்கமைப்பில் இடம்பெற்றது.
இந்த களிகம்பு பயிற்சி பட்டறை மற்றும் அரங்கேற்ற நிகழ்வில் சாய்ந்தமருது மருதூர் தக்வா கோலாட்ட குழு, சாய்ந்தமருது முஹம்மதிய்யா கலைமன்றம், மாவடிப்பள்ளி வளர்பிறை கலை மன்றம் ஆகியவற்றின் கலைஞர்கள் பங்களிப்புடன் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிகா கலந்து கொண்டார்.