வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (16) காலை பாடசாலையில் இடம் பெற்றது.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் எறிபந்து போட்டியில் அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் ,17 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும், 20 வயது பிரிவின் கீழ் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் பங்கு பற்றியது. 20 வயது ஆண்கள் முதலாம் இடத்தையும், 17 வயது பெண்கள் இரண்டாம் இடத்தையும், 17 வயது ஆண்கள் மூன்றாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.போட்டி கடந்த 13,14 ஆம் திகதிகளில் வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டார்.
சாதனை படைத்த மாணவர்கள் விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவர்கள்,ஆசிரியர்கள்,வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள்,பெற்றோர்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.