சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர்

சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீர் வழங்கும் நடவடிக்கை இன்று (08) அதிகாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்திற்கு உட்பட்ட ஹபுகல அனல்மின் நிலையம் மின்சார உற்பத்திக்கு ஓரளவு நீர் பயன்படுத்தப்பட்டு தெமோதரவில் உள்ள வளவ ஆற்றில் இருந்து கட்டுபட் ஓயா அணை வழியாக குறிப்பிட்ட அளவு தண்ணீர் உடவலவ நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர், சமனலவௌ அணைக்கட்டுக்கு அருகில் உள்ள வளவ ஆற்றின் ஊடாக உடவலவ நீர்த்தேக்கத்தில் சேர்க்கப்படும்.
தற்போதைய வறட்சியினால் உடவலவ பிரதேச விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன