ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1,250 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் காரணமாக கோழி இறைச்சியின் விலை குறைக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால் இரண்டு வாரங்களுக்குள் சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை 50 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கான இறக்குமதி வரி 75 ரூபாவில் இருந்து 25 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
சோளம் தட்டுப்பாடின்றி கிடைத்தால் எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
