கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை இன்று (06) ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இன்று காலை 7.30 மணிக்கு இந்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி உள்ள இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி வு. பிரதீபன் நேற்று விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தார்.

தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவஇ சட்ட வைத்திய அதிகாரி கே.வாசுதேவஇ சட்டத்தரணி ரனிதா ஞானராஜாஇ பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருடன் இது குறித்து கலந்துரையாடப்பட்டது.இதனைத்தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு தேவையான வசதிகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன