குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எரிபெருள் நிறுவனம் முயற்சி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு சினோபெக் எரிபெருள் நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து சினோபெக் எரிபெருள் நிறுவனம இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த கோரிக்கைக்கு; இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் இலங்கையில் சுமார் 130 எரிபொருள் விநியோக நிலையங்களுடன் செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைத்து விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன