கிளிநொச்சி வாளாகம் பல்கலையாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான வடயங்கள் தொடர்பில் பேசும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்திருந்தார்..

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – “குறித்த வளாகம் புலிகளின் தேவைக்கான பயன்பாட்டில் இருந்த நிலையில் இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் அதை அவர்கள் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர்.

அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கதைத்து அதனை பல்கலைக்கழகத்திற்கு பெற்றுக்கொடுத்திருந்தோம்.

தற்போது இவ்வளாகதிதில் நான்கைந்து துறைகளின் வளாகங்கள் வந்துள்ளது. இந்நிலையில் கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாற்றித் தருவோம்” அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

EPDP News

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன