காஸாவில் இடம்பெறும் மோதலை இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்துடன் ஒப்பிட முடியாது

காஸாவில் இடம்பெறும் மோதலைஇ இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்துடன் ஒப்பிட முடியாதென விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இதனை குறிப்பிட்டார்.
காஸா நெருக்கடிக்கு அமைதியான தீர்வு அவசியம் என்றும் சரத் வீரசேகர இதன்போது வலியுறுத்தினார்.

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் நேற்று யோசனை முன்மொழியப்பட்டது. இஸ்ரேல் – பலஸ்தீன் நெருக்கடிக்கு அமைதியான தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற யோசனை இதில் இடம்பெற்றிருந்தது. இந்த நெருக்கடிக்கு அமைதியான தீர்வு அவசியம் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பலஸ்தீனில் அமைந்துள்ள வீதியொன்றுக்கு தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
‘இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் முழு பாலஸ்தீனத்தையும் உலக வரைபடத்தில் இருந்து நீக்குவதற்கு முயற்சிக்கின்றனர். அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நாட்டில் ஒரு பாதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேலின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும்.மேற்குலக நாடுகள் ஹமாஸை தோற்கடிப்பது போன்ற விடயங்களையே கதைக்கின்றனர். ஆனால் அங்கே பாலஸ்தீனர்கள் படும் துன்பங்களை வெளிப்படுத்துவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உரையாற்றுகையில் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன