காணாமல் போன டைட்டன் மினி நீர்மூழ்கிக் கப்பல் – வெடிவிபத்தில் ஐந்து பேரும் உயிரிழப்பு

காணாமல் போன டைட்டன் மினி நீர்மூழ்கிக் கப்பல் வெடிவிபத்தினால்  அதில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது. டைட்டானிக் கப்பலின் சிதைவுகளுக்கு அருகில் சுமார் 1500 அடி உயரத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் 5 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர பாகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்று காணாமல் போன 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.

அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கி புறப்பட்டது. இந்த நீர்மூழ்கியில் ஓசன்கேட் தலைமை நிர்வாகி உட்பட 5 பேர் இருந்தனர்.

ஒரு மணி நேரம் 45 வது நிமிடத்தில் நீர்மூழ்கியில் இருந்து சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடாவின் கடற்படை கடந்த 4 நாட்களாக இரவு பகலாக ஈடுபட்டது. நீர் மூழ்கி கப்பலில் ஆக்சிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டு இருந்த 96 மணி நேர கெடு நேற்று காளியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மாயமான நீர்மூழ்கி கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறி அதில் 5 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

டைட்டானிக் கப்பலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில் சுமார் 1,600 அடி ஆழத்தில் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த 5 பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் ஆனால் அது காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் தானா என வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன