காசில் ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரிப்பு

மத்திய மலையக பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக

மேற்கு சரிவுப் பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழை காரணமாக காசில் ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் சுமார் 15 அடி வரை அதிகரித்துள்ளது.

மழையையடுத்து நீர்த்தேகத்தின் நீர் மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

காசில் ரீ நீர்த்தேக்கத்தின் அணையின் உயரம் 155 அடி எனவும், அதன் நீர் கொள்ளளவை பூர்த்தி செய்வதற்கு  மேலும் 33 அடி நீர் கொள்ளளவு தேவை என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் மழை பெய்யாததால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன