கந்தானை தொழிற்சாலை தீ: 50 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (08) காலை இடம்பெற்ற தீயினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் 50 பாடசாலை மாணவர்கள் சுவாசக் கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த நபர் கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன