கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை.

பொறியியலாளரும் சமூக சேவையாளருமான சண் குகவரதனினால் நிர்மாணிக்கப்பட்டு, எம்.டி.எல்.குணரத்னவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வள்ளி – தெய்வானை சமேத கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை எதிர்வரும் (24) செவ்வாய்க்கிழமை சுபமூகூர்த்தத்தில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தில் இது பிரதிஷ்டை செய்யப்படும் என்று தமிழ் சேவைப் பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளை எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன