கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில்..

யாழ்;ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரியம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஆலயத்தினை நேற்று மாலை ஆலய பூசகர்கள் சென்று பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து ஆலயத்தில் குருமார்கள் பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.
33 வருடங்களுக்கு பின்னர் இந்த ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு தற்போது பத்தர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
கட்டுவன் காசியம்பாள் ஆலய நிர்வாகத்தினரால், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர், விஜயகலா மகேஸ்வரனிடம் விடுத்த கோரிக்கைக்கமைவாக, குறித்த ஆலயத்தினை சென்று பார்வையிடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கினர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன