கடவுச்சீட்டை பெறுவதற்கான  நீண்ட  வரிசை இன்னும் சில நாட்களில் முடிவடைவுக்குவரும் 

கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசல் நிலை இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்கப்படுவதாக  குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஏற்கனவே நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு  கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையும் என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை பெறுவதில் தந்போது நிலவும்  நெரிசல் நிலை  இன்றி வழமை போன்று கடவுச்சீட்டுகளை தமது அலுவலகத்தினால் வழங்கக்கூடியதாக இருக்கும்  என்றும்  அவர் மேலும் கூறினார்.

கடந்த காலங்களில் கடவுச்சீட்டை பெறுவதில் குடிவரவு மற்றும் குடியகல்வுத்  திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் பெரும் நெரிசல் காணப்பட்டது. கடவுச்சீட்டை பெறுவதற்கான  வாய்ப்புக்காக  மக்கள் முதல நாள் முதல் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய  நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன