ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றாத
அரச அதிகாரிகள் – ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை…

பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் வருகை தராத அரச அதிகாரிகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிக்கை அனுப்புமாறு கம்பஹா பிரதேச செயலாளர் சுரங்கா குணதிலக்கவிற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

எனவே, ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அரச அதிகாரிகள் வராத நிலையில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்திக்கான தீர்மானங்களை எடுப்பது சிரமமாக இருக்கும்.

கம்பஹா மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) நடைபெற்ற கம்பஹா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன