ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் சேப்பாக்கத்தில்

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டித்தொடரில் 55 ஆவது போட் டி நாளை மறுதினம் (10) தமிழகத்தின் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் பெற ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். டிக்கெட் விலை ரூ.1இ500 – ரூ5இ000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

16-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன