லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 12.05 கிலோ லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1256 ரூபா. 02 கிலோ 03 தசம எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 587 ரூபாவாகும்.
உலக சந்தையில் எரிவாயு விலை உயர்வுடன் ஒப்பிடும் போது 960 ரூபா மற்றும் 980 ரூபாவால் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக அதிகளவான எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்தமையினால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்
இன்று எமது நிறுவனம் வலுவடைந்துள்ளது. இதனால் மக்கள் மீது சுமையேற்படுத்தாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ரூபாய்வரை குறைத்தே தற்போது 145 ரூபாயை உயர்த்தியுள்ளோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
