ஊடகத்துறைதொடர்பான எதிர்காலத்திட்டங்கள் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களிடம் ஆலோசனை

ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு ஊடகத்துறையின் எதிர்காலம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களிடம் ஆலோசனை பெற்றது.

ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வீரசுமன வீரசிங்ஹ தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் குழுவுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் வர்ணகுமார தலைமைதாங்குகின்றார்.

இந்தக் கலந்துரையாடலில் களனி பல்கலைக்கழகம், ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் ஹொரண ஸ்ரீபாலி மண்டபம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊடகத்துறையுடன் தொடர்புபட்ட விரிவுரையாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் ஊடகத்துறைக்கான கொள்கைத் திட்டத்தைத் தயாரித்தல், அலைவரிசைகளை தர வரிசைப்படுத்தும் முறை (Ratings), தரமான தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்பட வேண்டிய முறை, இலங்கையில் ஊடக ஆய்வு நிறுவனமொன்றை நிறுவுதல் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் ஊடகங்கள் நடந்துகொள்ளும் முறை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. அத்துடன், தரமான ஊடகச் சுட்டெண் தயாரிப்பதற்கான 10 ஆண்டு தேசியத் திட்டமொன்றை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன, கௌரவ நிபுன ரணவக்க மற்றும் கௌரவ இம்ரான் மஹரூப் ஆகியோரும், பேராசிரியர் ரஞ்சன் ஹெட்டியாராச்சி, கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா, கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார, சிரேஷ்ட விரிவுரையாளர்களான விஜயானந்த ரூபசிங்க, சமந்திகா பிரியதர்ஷனி மற்றும் இமேஷா தர்மசேனா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன