உள்நாட்டுப் படுகடன் வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ பங்குபற்றியதாக அறிவிப்பு

பாராளுமன்றத்தில் அண்மையில் (01) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ பங்குபற்றியதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்  சமல் ராஜபக்ஷ சபையில் இருக்கவில்லை என ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் உண்மையற்றது எனவும் அவர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவும் செயலாளர் நாயகம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன