உள்நாட்டுப் படுகடன்  தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் திருத்தங்களுடன் (01) பாராளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை குறித்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றதுடன், 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 122  வாக்குகளும், எதிராக  62 வாக்குகளும் பதிவாகின.

கௌரவ பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 16வது நிலையிறக் கட்டளையின் கீழ் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற கூடியது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன