எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரையிலான ஐந்து வருட காலப்பகுதிக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி உதவியை விவசாயத் திட்டங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (14) விவசாய அமைச்சில் இடம்பெற்றது. விவசாய அமைச்சர் திரு.மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்து 500 மில்லியன் ரூபா கால்நடை அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
பசும் பால் வளத்தில் தன்னிறைவு கண்ட நாட்டை உருவாக்குவது இதன் நோக்கமாகும். 2014ஆம் ஆண்டின் பின்னர் கால்நடை வள அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட ஆகக் கூடுதலான தொகை இதுவாகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவசாயத்துறை சார்ந்த வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கென ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அபிவிருத்தி செய்யப்படாத கிராமிய விவசாய வீதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.