உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று (02) வங்கடே மைதானத்தில் இடம ;பெறவுள்ளது. இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
2011ஆம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இதே மைதானத்தில் விளையாடியமை சிறப்பம்சமாகும். இறுதியாக இடம் பெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது.
இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தின் போது, மாற்றங்கள் இடம் பெற மாட்டாதென எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி வீரரான தன்சய டி சில்வாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இலங்கை அணி வீரர் சதீர சமரவிக்ரம, எதிர்பார்த்ததை விட, சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.
நேர் மறையான சிந்தனையுடன் வீரர்களை விளையாடச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்று உறுதியான மனப்பான்மையுடன் வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஆகக் கூடுதலான 100 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை சமப்படுத்துவதற்கு விராட் கொஹ்லிக்கு மற்றுமொரு 100 ஓட்டம் மாத்திரமே தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன