2019 ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நௌஃபர் மவ்லவி மற்றும் 23 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் வாசிப்பு நேற்று (ஆகஸ்ட் 11) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது.
குற்றச்சாட்டுகள் தொடர்பான கடந்த ஜந்து நாட்களாக இடம்பெற்றன.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகள் தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில், பிரதிவாதிகள் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
வழக்கு; விசாரணை அக்டோபர் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நௌபர் மவ்லவி, சஜீத் மவ்லவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, மொஹமட் சனஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக, 2019 பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியமை, ஊக்குவித்தல் மற்றும் சதி செய்தல் உட்பட 23,270 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்..
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளில் கொலைக்கு சதி செய்தல், உதவி செய்தல், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தல் மற்றும் கொலை முயற்சி ஆகியவை அடங்கியுள்ளன..
இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. அம்பாவிலவுக்கு அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
