உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ,தேசிய பாதுகாப்பு: எதிர்க்கட்சி சபை ஒத்திவைப்பு விவாதம்

பாராளுமன்றம் இன்று காலை 9.30இற்கு கூடவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் திருமதி குசானி சேனாதீர தெரிவித்தார்.

ஆட்பதிவு சட்டமூலத்தின் கீழ் வரும் கட்டளை மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் கீழ் வரும் கட்டளை குறித்து இன்று விவாதிக்கப்படும். வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வரும் ஒழுங்கு விதி நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன