2022ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுதேச மற்றும் பரத நாட்டியம், சங்கீதம், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை இதன்போது இடம்பெறும். பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சங்கீதப் பாடத்திற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயசுந்தர தெரிவித்தார். இதற்காக புதிய அனுமதிப்பத்திரத்தை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். திணைக்களத்தின் www.onlineexam.gov.lk என்ற இணையதளத்திற்கு பிரவேசித்து புதிய அனுமதிப் பத்திரத்தை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செயன்முறைப் பரீட்சை தொடர்பான ஏதாவது பிரச்சினைகள இருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.