உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசாங்கம் தலைவணங்கும் – பிரதமர்

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அரசாங்கம் தலைவணங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்கள் நகர சபைகள், மாநகர சபைகள் திருத்த சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதி மன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்கள் நகர சபைகள், மாநகர சபைகள் என்பவற்றில் திருத்தங்கள் என்ற பெயரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டதல்ல எனவும், அரசாங்கம் எப்பொழுதும் நீதி மன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுவதாகவும் பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன