ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்:எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்ற நூலகத்திற்கு வழங்கியுள்ள போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் அதனை அதை ஆராயாமை வருத்தமளிப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதிக்கும் பாரதூரமான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (19) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த அறிக்கையில் எந்த இடத்திலும் அவர் ஆலோசனை வழங்க வருவதாகக் கூறப்படவில்லை. விருப்பப்பட்டால் பங்கேற்கலாம், இல்லை என்றால் பங்கேற்காமல் இருக்க  முடியும். எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்களை கூறாமல் இருப்பது உங்கள் பொறுப்பு.

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல

கௌரவ சபாநாயகர் அவர்களே, நீங்கள்  மறைக்க முயற்சிக்கிறீர்களா?

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன – இல்லை.. நான் மறைக்கவில்லை.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல

நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடரப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறுவதாக நான் கூறுகின்றேன். ஆனால் அவர் பதவி உயர்வு பெற்றார். இப்போது அவர்தான் எங்களுக்கு அறிவுரை வழங்குகிறார்.  வெட்கமாக இல்லையா?

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

 கௌரவ சபாநாயகர் அவர்களே, இவர்கள் நாட்டுக்கு தவறான புரிதலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது. அறிக்கையைப் படித்தால் உங்களுக்கே புரியும். நீங்கள் கூறும் காரணங்களை இங்கே கேட்டு தாங்களே  சரி செய்து கொள்ளலாம். இத்தாக்குதல்கள் அவர்களின் காலத்தில் நடந்தன. நாட்டுக்கு தவறான செய்தியை கொடுக்க வேண்டாம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச –

கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை வழங்குமாறு எனது அலுவலகத்தின் ஊடாக பாராளுமன்ற நூலகத்திடம் கோரிக்கை விடுத்தேன். இது இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாம் தொகுதியின் சில பகுதிகள் கொடுக்க முடியாது. தேவைப்பட்டால் நூலகத்திற்கு வந்து ஆலோசிக்கச் சொன்னார்கள்.  இது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் கிடைத்த ஆலோசனையாகும். இப்போதும் அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறோம். நாடாளுமன்ற பொதுச் செயலாளரின் மேற்பார்வையில் தானே நான் இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்ற வேண்டும். இப்போதும் இந்த தாக்குதல் குறித்த உண்மை வெளிவர வேண்டும். எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை எனக்கு மட்டுமன்றி 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கைகளில் இரத்தக் கறை உள்ளவர்கள் இதை மறைக்கிறார்கள்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

 எமக்கு மறைக்க எதுவும் இல்லை.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை தொடர்பில் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். திருமதி பண்டாரநாயக்கா காலத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் தந்தையின் காலத்திலும் அமைச்சர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்வார்கள். இல்லையேல் நூலகத்தில் சென்று பார்த்துக் கொள்ளச் சொல்வார்கள். இதைப் போலவே தன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக கேட்கப்பட்ட கேள்வி என்று அமைச்சர் நினைத்தால், இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்ல முடியும். மேடமும் ரஞ்சன் விஜேரத்னவும் இவ்வாறே கூறியுள்ளனர். மேலும், இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சபாநாயகர் அதை ஒரு பதிலாக ஏற்றுக்கொள்கிறார். எனவே, அதை நூலகத்தில் வைக்க ஒரு அமைச்சருக்கு முழு உரிமை உண்டு.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா

கௌரவ சபாநாயகர் அவர்களே, நீங்கள் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இதனை வழங்குவதற்கு தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால்  இந்த பிரச்சனையே இருக்காது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இந்த அறிக்கை நீண்டகாலமாக பாராளுமன்ற நூலகத்தில் உள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த எம்.பி.க்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டில் பெரும் பிரச்சினையாக உள்ளது.

அதை எதிர்க்கட்சித் தலைவர் இப்போது பார்க்க உள்ளார். சபாநாயகர் அவர்களே, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றது. நாங்கள் அதில் வெற்றி பெற்றோம். அதற்கு முதல் காலி முகத்திடல் மைதானத்தை நிரப்ப கூட்டத்தைக் கொண்டு வந்தோம். நாங்கள் ஒரு வாக்கெடுப்பு நடத்தினோம். அவரது தோல்வியின் சோகக் கதைகளை நாம் கேட்க வேண்டியதில்லை.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன